
யாழ்.நகருக்கு அண்மையில் உள்ள பகுதியில் ஹெரோயின் போதை நுகா்ந்து கொண்டிருந்த 4 இளைஞா்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள் எனவும் நால்வரும் யாழ், நகரை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.