
தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்
கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனையிடப்படுபட்டதாகவும், போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.