எமது சமூகம் சீரழிகிறது – சி.வி.ஆதங்கம்.

நெருக்கடியான காலங்களில் ஒழுக்கவிழுமியங்களை கைவிடாத எமது சமூகம்இன்று பல்வேறு வழிகளில் சீரழிந்துவருகிறது! விக்னேஸ்வரன் வருத்தம்!

பல நெருக்கடியான காலங்களில் ஒழுக்கவிழுமியங்களை கைவிடாத எமது சமூகம்இன்று பல்வேறு வழிகளில் சீரழிவுகளுக்குஉட்பட்டு வருவது மனவருத்தத்தைதருகிறதென, வெண்கரம் அமைப்பினரால்நடாத்தப்பட்டுவரும் படிப்பகத்திற்கான நிதிஉதவியை வழங்கி வைத்து உரையாற்றியதமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்நாயகமும் முன்னாள் நீதியரசருமாகியசி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்தெரிவித்துள்ளார்.

பின் தங்கிய பிரதேசங்களில் உள்ளமாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்திசமூக அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்உயர்ந்த நோக்கில் கல்விச் சேவையைவழங்கிவரும் வெண்கரம் அமைப்பின்ஆசிரியர் ஆளணியின் செலவுக்கானஉதவித்தொகையை நோர்வே சுன்மோர பகுதிவாழ் ஈழத்தமிழர்களுடன் இணைந்து தமிழ்மக்கள் கூட்டணி சார்பில் வழங்கிவைக்குநிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே சி.வி.விக்னேஸ்வரன்அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வு சுழிபுரத்தில் செயற்பட்டு வரும்வெண்கரம் படிப்பகத்தில் ஞாயிறு காலை10.00 மணிக்கு ஆரம்பமாகியது. மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுஆரம்பமாகியது. வெண்கரம் அமைப்பின்இணைப்பாளர்களில் ஒருவரான பொன்ராசாஅவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்துமுதன்மை இணைப்பாளர் கோமகன் அவர்கள்தலைமையுரையாற்றியிருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும்பொருளாதார விவகாரங்களுக்கான உபசெயலாளருமாகிய பேராசிரியர்வி.பி.சிவநாதன் மற்றும் தமிழ் மக்கள்கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்இரா.மயூதரன் ஆகியோரது சிறப்புரையைத்தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களது பிரதம விருந்தினர் உரைஇடம்பெற்றிருந்தது. நிகழ்வில் தமிழ் மக்கள்கூட்டணியின் இளைஞர் அணிஇணைப்பாளரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருமாகியகிருஸ்ணமீனனும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து வெண்கரம் அமைப்பின்கல்வி செயற்பாட்டிற்கானஉதவித்தொகையாக ஒரு இலட்சம் ரூபாதொகையினை சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் வெண்கரம் அமைப்பின்செயற்பாட்டாளர்களிடம்கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்