சூர்யா ‘போதை ஏறி புத்தி மாறி’!!

மருத்துவராக இருந்து நடிகரான தீரஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் போதை ஏறி புத்தி மாறி. இப்படத்தின் டீசரை நேற்று(மே 24) சூர்யா டிவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக நடிகரான தீரஜ், ராதாரவி, சார்லி, பிரதைனி சர்வா, அஜய், துஷாரா மற்றும் பலர் நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி எனும் படம் உருவாகியுள்ளது. நலன் குமாரசாமியிடம் சூது கவ்வும் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் நடராசன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப்படத்தினை அறிமுக இயக்குநர் சந்துரு இயக்கியுள்ளார். இவர் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

சூர்யா நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெகுவாகக் கவனம் பெற்றுள்ளது. டீசரில் பயன்படுத்தியிருக்கும் பின்னணியிசையும் ஒலிப்பதிவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இசையமைப்பாளராக கே பி என்பவரும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் மூலம் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். அபி அண்ட் அபி நிறுவனம் மூலம் இந்த படத்தை அபினேஷ் இளங்கோவன் வெளியிட இருக்கிறார்.


Recommended For You

About the Author: Editor