குழு மோதலில் இளைஞன் பலி..!!

சனிக்கிழமை இரவு, Romainville இல் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.

இச்செய்தியினை Romainville நகர முதல்வர் Corinne Valls வெளியிட்டுள்ளார். சனிக்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில், 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், அதீத இரத்தம் வெளியேறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள Gagarin பகுதியில் அதிகாலை 2 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை) இந்த மோதல் வெடித்ததாகவும், உயிரிழந்த இளைஞன் Loir-et-Cher இனைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிகிறது.

கடந்த சில மாதங்களாக Romainville இல் உள்ள ஒரு குழுவுக்கும் Lilas இல் உள்ள குழு ஒன்றுக்கும் அடிக்கடி மோதல் வெடித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் Richard எனும் 26 வயதுடைய இளைஞன் இதே பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor