பிரெஞ்சு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அகதி! – கைது..!!

பிரெஞ்சு இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அகதி ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு பிரான்சான Mont-de-Marsan நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளம் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நான்காவது நாள் குறித்த அகதி கைது செய்யப்பட்டுள்ளான். அல்ஜீரிய நாட்டு குடியுரிமை கொண்ட அகதியான குறித்த நபரை காவல்துறையிருக்கு முன்னதாக தெரியும் எனவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முன்னதாக அல்ஜீரிய, மெராக்கோ மற்றும் துனிஷிய நாட்டு குடியுரிமைகள் கொண்ட மூன்று நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் DNA சான்றுகளின் அடிப்படையில் சரியான குற்றவாளி அடையாளம் காணப்பட்டான்.

Johanna Blanes beneath எனும் 24 வயதுடைய இளம் பெண்ணின் நிர்வாணச்சடலம், தொடருந்து தண்டவாளத்துக்கு அருகே கிடந்த நிலையில், பாதசாரிகள் காவல்துறையினரை தொடர்புகொண்டு தெரிவித்த தகவலை அடுத்து, சடலம் மீட்கப்பட்டது. குறித்த அல்ஜீரிய நாட்டு அகதி விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளான் .


Recommended For You

About the Author: Editor