மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டினர்கள் மீட்பு!!

தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மாரைச் சேர்ந்த 49 பேர் இருவேறு நடவடிக்கைகளில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தாய்லாந்தின் சோங்க்லா (Songkhla) மாகாணத்தின் ரத்தனபூம் மாவட்டத்தில் வாகனத்தில் மறைந்திருந்த 8 மியான்மார் பிரஜைகளை பொலிஸார் மீட்டனர்.

“வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்தனர். இது தொடர்பாக தாய்லாந்து நாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் மனித கடத்தல் மையத்தின் இயக்குநர் ஜெனரல் சூசெரஸ் தீராசாவத் கூறியுள்ளார்.

இதேவேளை, சோங்க்லா மாகாணத்தின் வனப் பகுதியில் நடந்த மற்றொரு மீட்பு நடவடிக்கையில், ரோஹிங்கியர்கள் உட்பட 41 மியான்மார் முஸ்லிம்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்திலிருந்து மலேசிய எல்லை சுமார் 100 கிலோ மீற்றருக்குள் அமைந்திருப்பதால், இவ்வழியாக தொழிலாளர்கள், குடியேற்றவாசிகள் கடத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது.

இதில் பெரும்பான்மையாக வறுமையில் சிக்கியுள்ள மியான்மார், லாவோஸ், கம்போடிய நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவணங்களின்றி இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor