யாழ் மாநகர சபை முதல்வர் கனடாவில் பெண்களுடன் கொண்டாட்டம்!!

யாழ் மாநகர சபை முதல்வர் டொரோண்டோ கனடாவில் பெண்களுடன் குதூகலமாக கோடை கால விடுறையில் யாழ் மாநகர சபை பொறுப்பேற்கப்பட்டு ஆண்டுகள் கடந்து போகின்றன .

எந்தவொரு குறிப்பிட தக்க பணியும் நிறைவேற்றப்படவில்லை .
சபைக்கு சொந்தமான சந்தைகள் இன்னமும் துர்நாற்றம் வீசுகின்றன .நூலகங்கள் போதிய கவனிப்பு இன்றி இருக்கின்றன .

கணக்கறிக்கைகள் வெளிப்படை தன்மை பேணப்படுவது இல்லை .குளங்கள் தூர்வாரப்படவில்லை . வடிகாலமைப்பு பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை . பொதுசுகாதாரம் / குப்பை அகற்றல் என எதிலும் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை .

அரசாங்க கரம்போலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகிற 30 m -300 m ஒழுங்கைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறோம் என்கிற பெயரில் உறுப்பினர்கள் பொதுமக்க்களிடம் காசு வசூலிக்கிறார்கள் அனால் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனிப்பட்ட பாவனைக்கு 628,000 க்கு கணனி Apple MR924PA/A மாநகர சபை நிதியில் வாங்க பட்டு இருக்கிறது .

மிக சிறிய அளவான வருமானம் உழைக்கும் யாழ் மாநகரசபை ஏதன் அடிப்படையில் முதல்வருக்கு 6 லட்சம் பெறுமதியான கணணியை பெற சம்பாதித்தது ?

தன்னுடைய நாளாந்த செலவுகளை ஈடு செய்ய கூட நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மாநகரசபை தன்னுடைய நிதி வீணடிக்கப்படுவது குறித்து அக்கறை செலுத்தாது ஏன் ? இது பொது நிதி துஷபிரோயகம் இல்லையா ?

தொழில்முறைசார்ந்து பயிற்சி பெற்ற வீடியோ பட தொகுப்பாளர்கள் பயன்படுத்த கூடிய/பயன் பெற கூடிய இந்த கணனி ஒரு அலுவலக பாவனைக்கு எந்த அடிப்படையில் பொருத்தமானது ? இது அதிகார துஷபிரோயோகம் இல்லையா ? இப்போது தங்கள் ஆட்சி முடிவில் பின் இந்த கணணியை வீடு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்ய பட்டு இருக்கிறதாம் .இந்த கொள்ளைகளை தடுப்பது யார் ? மத்திய ஆட்சியில் பங்கு பெரும் துணிவில் சுமந்திரன் போன்ற மத்திய அரசியல் செல்லப்பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த ஆர்னோல்ட் போன்ற அல்லக்கைகள் செய்யும் மோசடிகளை தடுப்பது யார் இது பகல் கொள்ளை .. மக்கள் விழிப்பு பெறாத வரை எந்த சட்டத்தாலும் இவர்களை தடுக்க முடியாது .. தொடர்ந்து திருடுவார்கள் ..


Recommended For You

About the Author: Editor