வலுவடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 4.1 வீதத்தில் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வார இறுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.21 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

180 ரூபாவை கடந்த நிலையில் காணப்பட்ட அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய இந்த விடயம் வெளியாகி உள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor