கென்னடி கிளப்’ டீசர் வெளியீடு!!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார்.

டி.இமானின் பின்னணி இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் கபடிக்காட்சிகள் அமைந்துள்ளன. இதில் சசிக்குமார், பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிக பொருட்செலவில் பெண்கள் கபடியை கதைக் களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor