மீண்டும் சட்டத்தை மீறிய ஜனாதிபதி-விஜேதாச ராஜபக்ச !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக குடியரசின் முப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு தகவல்களை நாடாளுமன்றத்திற்கோ அல்லது வேறு இடங்களில் வெளியிட இடமளித்துள்ளதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் 31.1(ஆ) மற்றும் 38.2 (அ.1) ஆகிய ஷரத்துக்களை மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளியுள்ளதாக கூறி, சபாநாயருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விஜேதாச ராஜபக்ச மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் நவம்பர் 11 ஆம் திகதி ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க விஜேதாச ராஜபக்சவே சட்டரீதியான ஆலோசனையை வழங்கியிருந்தார்.

இதனால், அவர் மீண்டும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்கள் பற்றி பேசுவது நகைப்புக்குபுரியது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்


Recommended For You

About the Author: Editor