முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

2019ம் ஆண்டிற்கான 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்று மகுடம் சூடி இருக்கிறது.

நியூஸிலாந்திற்கு எதிராக மிகவும் திரில்லாக சென்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் பவுண்டரி கணக்கு மூலம் வெற்றிபெற்றது

2019 உலகக்கோப்பை தொடர் மட்டுமல்லாது, உலகக்கோப்பை வரலாற்றிலேயே சிறந்த போட்டியாக மாறியது இங்கிலாந்து – நியூசிலாந்து மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி.

இரு அணிகளும் சரி சமமாக மோதின. போட்டி டை ஆனது. அடுத்து சூப்பர் ஓவரும் டை ஆனது. இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இதயத் துடிப்பு எகிறியது.

விதிப்படி இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

முக்கியமான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும், அந்த அணி பேட்டிங்கில் வழக்கம் போல தடுமாறியது. லீக் போட்டிகளிலும், அரையிறுதியிலும், நியூசிலாந்து பேட்டிங் எப்படி தடுமாறியதோ அதே போலத் தான் இறுதிப் போட்டியிலும் ஆடியது.

கப்தில் ஏமாற்றம்

கப்தில் ஏமாற்றம்

துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் எப்போதும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழப்பார். ஆனால், இறுதிப் போட்டி என்பதால் கொஞ்சம் கருணை காட்டி 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். நிக்கோல்ஸ் 55, வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ராஸ் டெய்லர் அவுட் இல்லை

ராஸ் டெய்லர் அவுட் இல்லை

அடுத்து மூத்த வீரர் ராஸ் டெய்லர் தான் அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை. அப்போது ராஸ் டெய்லருக்கு தவறான எல்பி டபுள்யூ அவுட் கொடுத்தார் அம்பயர். இருந்த ஒரு ரிவ்யூவை கப்தில் வீணாக்கியதால், டெய்லரால் ரிவ்யூ கேட்க முடியவில்லை. டாம் லாதம் 47, நீஷம் 19, கிராண்ட்ஹோம் 16 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 241 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து அணியில் வோக்ஸ் 3, ஆர்ச்சர் 1, பிளங்கட் 3, மார்க் வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். பென் ஸ்டோக்ஸ் மட்டுமே 3 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் கொடுத்து ரன்களை அதிகமாக கொடுத்து இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து அசத்தினர்.

இங்கிலாந்து சொதப்பல்

இங்கிலாந்து சொதப்பல்

இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது. ஆனால், துவக்கதிலேயே விக்கெட்களை இழந்து தவித்தது. ஜேசன் ராய் 17, ஜோ ரூட் 7, பேர்ஸ்டோ 36, மார்கன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேசன் ராய் தவிர்த்து மற்ற மூவரும் அதிக பந்துகளை வீணடித்தனர்.

ஸ்டோக்ஸ் - பட்லர் போராட்டம்

ஸ்டோக்ஸ் – பட்லர் போராட்டம்

இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 86 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து பரிதவித்து வந்தது. அப்போது பட்லர் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். அவர்களை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. பட்லர் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பெர்குசன், நீஷம் கலக்கல்

பெர்குசன், நீஷம் கலக்கல்

பெர்குசனின் அடுத்தடுத்த ஓவர்களில் பட்லர், கிறிஸ் வோக்ஸ் வீழ்ந்தனர். நீஷம் வீசிய 49வது ஓவரில் லியாம் பிளங்கட், ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. ஸ்டோக்ஸ் மட்டுமே ரன் குவிக்கக் கூடிய பேட்ஸ்மேன். 8 விக்கெட்களை இழந்து இருந்தது இங்கிலாந்து.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் பல ஆச்சரியங்கள் நடைபெற்றது. இப்படிக் கூட ஒரு இறுதிப் போட்டியில் நடைபெறுமா என்ற அளவுக்கு சம்பவங்கள் நடந்தன. முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் இல்லை. மூன்றாம் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஸ்டோக்ஸ். நான்காம் பந்தில் இரண்டு ரன்கள் ஓடினார் ஸ்டோக்ஸ். அப்போது நடந்த ரன் அவுட் முயற்சி ஓவர் த்ரோவாகி கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது. ஐந்தாம் பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓடி விட்டு, இரண்டாம் ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது அதில் ரஷித் ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசி பந்து

கடைசி பந்து

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இதே போல ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓட, மார்க் வுட் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டி டை ஆனது. நியூசிலாந்து அணியில் பவுல்ட், நீஷம் அதிக ரன்கள் கொடுத்ததே, போட்டி டை ஆக காரணமாக அமைந்தது. அடுத்து சூப்பர் ஓவர் நடைபெற்றது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றது. அதுவும் இறுதிப் போட்டியில் நடந்தது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற சூப்பர் ஓவர் விதிப்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து 15 ரன்கள்

இங்கிலாந்து 15 ரன்கள்

ட்ரென்ட் பவுல்ட் சூப்பர் ஓவரை வீசினார். ஸ்டோக்ஸ், பட்லர் பேட்டிங் செய்தனர். ஸ்டோக்ஸ், பட்லர் தலா ஒரு ஃபோர் அடித்தனர். மொத்தமாக 15 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.

சூப்பர் ஓவரும் டை ஆனது

சூப்பர் ஓவரும் டை ஆனது

நியூசிலாந்து அணியில் ஜிம்மி நீஷம், மார்ட்டின் கப்தில் பேட்டிங் செய்ய வந்தனர். ஆர்ச்சர் பந்து வீசினார். நீஷம் அபாரமாக ஆடி ஒரு சிக்ஸ் அடித்து, 5 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் கப்தில் 1 ரன் எடுத்து இரண்டாம் ரன் ஓட முயற்சிக்க, ரன் அவுட் ஆனார். சூப்பர் ஓவரும் டை ஆனது.

2019 உலகக்கோப்பை சாம்பியன்

2019 உலகக்கோப்பை சாம்பியன்

விதிப்படி சூப்பர் ஓவரும் டை ஆனதால், அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் அதிக பவுண்டரி அடித்துள்ளது. எனவே, உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் கண்ணீர்க் கடலில் மிதந்தார். இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பை வென்றது. நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor