உங்களை எதிர்பார்க்கிறது சமூகம்

தமிழர் தேசம் கடந்து வந்த பாதையினை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய சூழலில் யாழ்.ஊடக அமையத்தால் ‘உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்’ எனும் நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அடக்குமுறைகளால் நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையில் அதன் அப்போதைய ஆசிரியரான கலாநிதி சி.ரகுராமினால் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்களின் தொகுப்பே நூலாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக நூலக கருத்தரங்க மண்டபத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிக்சன் தலைமையில் நூல் அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
நூல் மீதான பார்வையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், கலாநிதி அரசறிவியல்துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் ஊடக அமைய தலைவர் ஈ.சபேஸ்வரன் ஆகியோர் முன்வைக்கவுள்ளனர்.
ஏற்கனவே மறைந்த ஊடகவியலாளன் டயஸின் கேலிச்சித்திரங்களை ஊடக அமையம் தொகுத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்