
காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரணையைச் சேர்ந்த சாமல்லசங்க வெந்தசிங்க (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை முடித்துக்கொண்டு படகில் இருந்து கரையேறும் போது கரையில் இருந்த மின்கம்பத்தை பிடித்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.