ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடி

வருகிற செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டம் நியூயார்க் நகரில் வருகிற செப்டம்பர் மாதம் 20 முதல் 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதோடு பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஹூஸ்டன் நகரங்களுக்கு செல்லவிருக்கிறார்.

டெக்சாஸ் நகரில் அமெரிக்க வாழ் இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மேலும், ஐ.நா கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் பிரதமர் மோடியுடன் கலந்துபேசி இந்தியா- அமெரிக்காவுக்கு இடையேயுள்ள வரி பிரச்னைகள் பேசி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor