சமீரா ரெட்டிக்கு பிறந்தது என்ன குழந்தை தெரியுமா?

நடிகை சமீரா ரெட்டி  வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் வேட்டை .  இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு திரைதுறைக்கு முழுக்கு போட்டு விட்டு, கடந்த 2014ம் ஆண்டு  அக்ஷய்  வர்த் என்னும்  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நான்கு வயதில் ஹன்ஷ் வர்த் என்னும் மகன் உள்ளான்.
இந்நிலையில் சமீரா ரெட்டி “தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்ததோடு, அவ்வப்போது, வயிற்றில் குழந்தையுடனான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சமீரா ரெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமீரா.


Recommended For You

About the Author: Editor