4 நாட்கள் வெளியே வரும் நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, இன்னும் 4 நாட்களில் பிணையில் வெளியே வரவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

நளினியின் மகள் ஹரித்ரா திருமணத்திற்காக பிணையில் வருகைத் தரவுள்ளதுடன் அவரது மகளும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

அந்தவகையில் பிணை ஆவணங்களை, வேலூர் சிறை நிர்வாகத்திடம்  இன்று (சனிக்கிழமை) வழங்கிய பின்னர் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நளினியின் மகள் திருமணத்திற்கு 6 மாதங்கள் பிணை கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 1 மாத காலம் மாத்திரம் பிணை வழங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்