நான் டாக்டர் இல்ல, டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்

பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சரண், நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கிய திரைப்படம் இது

நான் ஒரு டாக்டர், எவ்வளவு ரத்தத்தை பார்த்திருப்பேன், எவ்வளவு ஆபரேசன், எவ்வளவு சேதாரம் இந்த கையால எத்தனை பேரை அறுத்து தச்சிருப்பேன் என்று கூறிக்கொண்டே ஆக்சனில் ஈடுபடும் ஆரவ், ஒரு ஆக்சன் ஹீரோவாக தேறிவிட்டார் என்றே தெரிகிறது

நான் டாக்டர் இல்ல, டான் என்று கூறும் ஆரவ், ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளார். நாசர், ராதிகா, சாயாஜி ஷிண்டே, நிகிஷா பட்டேல் என டீசரில் தோன்றும் நட்சத்திரங்கள் அனைவருமே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சைமன் கிங் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும்போல் தெரிகிறது.

மொத்தத்தில் இயக்குனர் சரண் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வந்துவிட்டார் என்றே தெரிகிறது


Recommended For You

About the Author: Editor