‘அருந்ததி 2’ படத்தில் அனுஷ்கா இல்லையா?

நடிகை அனுஷ்கா தமிழில் ‘ரெண்டு’ என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் புகழ் பெற காரணமாக இருந்த படம் ‘அருந்ததி’.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்தே அவர் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாகம் சீசன் களைகட்டி கொண்டிருக்கும் நிலையில் ‘அருந்ததி 2’ படத்தையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தில் ‘அருந்ததி’ கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் ‘ஏஞ்சல்’ படத்திலும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘அருந்ததி’ என்றாலே அனைவருக்கும் அனுஷ்கா ஞாபகம் தான் வரும் என்றும், அனுஷ்கா இல்லாத ‘அருந்ததி’ படத்தை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் அனுஷ்காவின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

‘அருந்ததி 2’ படத்தில் அனுஷ்கா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 


Recommended For You

About the Author: Editor