சிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி நடத்திய தாக்குதலில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட பச்சீர் அவ் அகம் (pachir aw agam) மாவட்டத்தை சேர்ந்த மாலக் தோர் என்பவர், வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைவரும் சாப்பிட இருந்த இடத்தில், திருமணத்தில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன், உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.

இந்த கோர தாக்குதலில், மாலக் தோர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பச்சீர் அவ் அகம் பகுதியில், தலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அவர்கள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor