விமானத்திற்குள்ளேயே பறந்த பயணிகள்.

கனடாவின் வான்கூவரில் இருந்து புறப்பட்ட விமானம் திடீரென ஆட்டம் கண்டதால் சீட் பெல்ட் அணியாத 35 பயணிகள் காயமடைந்தனர்.

ஏர் கனடாவின் ஏசி 33 என்ற விமானம் கனடாவின் வான்கூவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி 284பேருடன் பயணித்தது.

ஹவாய் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழ் நோக்கி சென்றதால் சீட்பெல்ட் அணியாத பயணிகள் விமானத்துக்குள்ளேயே பறந்து மேற்கூரை மீது தலையை முட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளனர்.

பயணிகளில் 35 பேர் காயமடைந்ததால் விமானம் உடனடியாக ஹோனோலுலுவுக்குத் திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

அங்கு பயணிகளுக்கு தங்கும் வசதியும், உணவு வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.

லேசான காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த பின் விமானம் மீண்டும் புறப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. விமானம் இப்படி ஆட்டம் கண்டதற்கான காரணம் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor