பிரபல நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரை தனியார் கார் நிறுவனத்தின் டிரைவர் காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியதை அடுத்து நடிகை போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்த ஸ்வஸ்திக் தத்தா என்ற நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபலங்களில் ஒருவர்.

இவர் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக தனியார் வாடகை கார் நிறுவனம் ஒன்றின் காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கார் டிரைவர் திடீரென வண்டியை நிறுத்தி, தனக்கு வேறு ஒரு சவாரி கிடைத்துள்ளதாகவும், அதனால் காரில் இருந்து இறங்குமாறும் கூறியுள்ளார்.

ஆனால் நடிகையோ தான் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் இறங்க முடியாது என்றும், தன்னை கொண்டுபோய் சேர்த்துவிட்டு பின்னர் அடுத்த சவாரிக்கு செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டிரைவர், நடிகையை காரில் இருந்து குண்டுகட்டாக தூக்கி சாலையில் வீசி எறிந்துவிட்டு காரை எடுத்து கொண்டு சென்றுவிட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஸ்வஸ்திகா, டிரைவரையும் காரையும் தனது செல்போனில் படம் பிடித்து தந்தையின் உதவிடன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனக்கு நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து நடிகை ஸ்வஸ்திகா தனது பேஸ்புக்கில் விரிவாக புகைப்படத்துடன் கூறியுள்ளார்


Recommended For You

About the Author: Editor