உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லவளாக விடமாட்டோம்: லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கொலைகாரன்’ டாஸ்க் நேற்று முடிவடைந்தது.

இந்த டாஸ்க்கில் வனிதா மற்றும் மோகன் வைத்யா சிறப்பாக விளையாடியவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் சரியாக விளையாடாதவர்களாக சேரன் மற்றும் சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் சிறையில் அடைக்க பிக்பாஸ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சேரனுக்கு பதிலாக வேறு யாரும் சிறைக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்று கேப்டன் அபிராமி கேட்க மூன்று பேர் கையை தூக்கினர்.

அவர்களில் ஒருவர் லாஸ்லியா. மற்றவர்கள் சிறைக்கு செல்வதாக கூறியபோது அமைதியாக இருந்த வனிதா, லாஸ்லியா சிறைக்கு செல்வதாக கூறியவுடன் பொங்கி எழுந்தார்.

உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லவளாக விடமாட்டோம் என்றும், இது கேம், இதில் ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் சிறைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று சத்தம் போட்டார்.

கேப்டன் அபிராமி, லாஸ்லியா சொல்ல வருவதை சொல்ல விடுங்கள் என்று கூறியும் வனிதா தொடர்ந்து பேசி கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான லாஸ்லியா, வெளியே செல்ல முயன்றார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்திய போட்டியாளர்கள் அவரை பேச அனுமதித்தனர்.

இந்த டாஸ்க்கில் தனக்கு எந்த ரோலும் இல்லையென்றாலும் தான் செய்த ஒருசில குழப்பத்தால் தான் சேரன் சிறைக்கு நேர்ந்ததாகவும், அதனால் தான் சிறைக்கு செல்ல விரும்புவதாகவும் லாஸ்லியா கூறினார்.

ஆனால் அதற்கு வனிதா கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் சிறு மனஸ்தாபமும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor