இவரு சரிபட்டு வரமாட்டாரு…

லண்டன்:இங்கிலாந்துமுன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், பந்தை சேதப்படுத்தியதாக பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது ஒப்புக்கொண்டு இருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக கோப்பை பயிற்சி போட்டிகள் துவங்கிய பின்னரும், மழை விட்டும் தூவானம் விடாத கதையாக யாரை 4வது வரிசையில் இறக்குவது என்று பேசப்பட்டு வருகிறது. 4ம் வரிசையை கருத்தில் கொண்டு விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார்.

பல முன்னாள் வீரர்களும் நான்காம் வரிசை குறித்த தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். சிலர் விஜய் சங்கருக்கு ஆதரவாகவும், சிலர் கேஎல் ராகுலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். விஜய் சங்கர் பயிற்சியின் போது காயமடைந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் ஆடவில்லை. அதனால் 4ம் வரிசையில் ராகுல் களமிறங்கினார்.

ரோகித், தவான் விரைவில் ஆட்டமிழக்க 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ராகுல், பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கிடைத்த பொன்னான வாய்ப்பை

கோட்டைவிட்டார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச ரேக்கர், 4ம் வரிசை குறித்து பேசி இருக்கிறார்ர். அவர் கூறியதாவது: விஜய் சங்கர் 4ம் வரிசையில் ஆடலாம். ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். மிகவும் அரிதாக நான்காவது வரிசையில் இறங்குபவர்.

மிடில் ஆர்டரில் ஆடும் வீரர் ஸ்டிரைக் ரொடேட் செய்வதுடன் ஸ்பின் பவுலிங்கையும், நன்றாக ஆடக்கூடியவராக இருக்க வேண்டும். எனவே எந்த தருணமாக இருந்தாலும் விஜய் சங்கரை களம் இறக்கலாம் என்று கூறியிருக்கிறார்.


Recommended For You

About the Author: Editor