வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் தலையிட்டு, யாரையும் பேச விடாமல் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்று டாமினேட் செய்து வரும் வனிதாவுக்கு யாராவது மணி கட்ட மாட்டாரகளா? என்ற ஏக்கம்தான் வந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தான் ஒரு ஆம்பளை என தர்ஷன் இன்று நிரூபித்துள்ளார்.

டாஸ்க் ஒன்றில் தோல்வி அடைந்தவுடன் விதிகளை மாற்ற முயன்ற வனிதாவை பார்த்து அனைவரும் அமைதியாக இருக்க தர்ஷன் மட்டும் வனிதாவிடம் எகிறுகிறார்.

தன்னை எதிர்த்து பேசக்கூட இந்த வீட்டில் ஒரு ஆள் இருக்கின்றதே என்று ஆத்திரமடையும் வனிதா, ‘பிக்பாஸை கூப்பிடு என்று மைக்கை கழட்டி எறிந்துவிட்டு, தர்ஷனிடம் கோபமாக பேசினாலும் தர்ஷனும் விடாமல் பதிலடி கொடுத்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் ரசித்து பார்த்து வருகின்றனர்.

இவ்வளவு களேபேரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கேப்டன் என்ற பதவிக்கு சிறிதும் லாயிக்கில்லாத அபிராமி, அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் நடப்பதை அமைதியாக கவனித்து வருகிறார். வனிதாவுடன் சண்டை போட்டு வெளியே வந்த தர்ஷனுக்கு வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களின் ஆதரவு குவிகிறது. குறிப்பாக வனிதாவின் குரூப்பில் உள்ள முக்கியமானவரான சாக்சியே தர்ஷனுக்கு ஆதரவு தருகிறார். வனிதாவை தவிர மற்ற அனைவரிடமும் வாலாட்டும் சாண்டியும், கவினும் கூட தர்ஷனுக்கு ஆதரவு தந்துள்ளனர்.

வனிதாவின் உண்மை முகம் தற்போதுதான் அவருக்கு நெருக்கமானவர்களுக்கே புரிய வந்துள்ளதால் அவருடைய அகம்பாவ சாம்ராஜ்யம் சரிந்ததாகவே தெரிகிறது.

வனிதா தனிமைப்படுத்தப்பட்டது போல் இரண்டாவது புரமோவில் காட்சிகள் உள்ளது பார்வையாளர்களுக்கு பெரும் சந்தோஷம்.

வனிதாவை முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்போம். ஆனால் அவரை இன்னும் கொஞ்ச நாள் வீட்டுக்குள் இருக்க வைத்து, அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்து அவரை வச்சு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. போகிற போக்கை பார்த்தால் நிச்சயம் அது விரைவில் நடக்கும் என்றே தெரிகிறது.

Embedded video

Vijay Television

@vijaytelevision

#Day19 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

 


Recommended For You

About the Author: Editor