பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா இன்றைய அடுத்த புரமோவில் பட்டாம்பூச்சியாய் மிளிர்கிறார்.

பட்டாம்பூச்சி போல் நடனம் ஆடிக்கொண்டே பட்டாம்பூச்சியை எப்படி பிடிக்க வேண்டும் என்று லாஸ்லியா செய்து காட்டுவது ஒரு உண்மையான பட்டாம்பூச்சியே நடனம் ஆடுவது போல் உள்ளது.

அதற்கு பொருத்தமாக பின்னணியில் சாண்டி ‘ஓ பட்டர்பிளை ஓ பட்டர்பிளை’ என்ற பாடலை பாட இன்னொரு பக்கம் அபிராமியை முகின் விரட்ட என பிக்பாஸ் வீடே சந்தோஷமாகவும் ஜாலியாகவும் உள்ளது.

இந்த புரமோ ஜாலியாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம், வனிதா இந்த புரமோவில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும், அவரது முகம் ஒரு குளோசப் காட்சியில் கூட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புரமோவில் கவின் இல்லாததும் ஒரு திருப்தியை வரவழைக்கின்றது.

Embedded video

Vijay Television

@vijaytelevision

#Day19 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision


Recommended For You

About the Author: Editor