விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரீனா!!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றுவருகிறது.

தற்போது அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்து இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2ஆவது அரையிறுதியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத செக்குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 7ஆம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 8ஆம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிமோனா ஹாலெப் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரது ஆட்டத்திற்கு ஸ்விட்டோலினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஹாலெப் முதல் செட்டை 6-1 எனவும், 2ஆவது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை (ஜூலை 13) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் செரீனாவும், ஹாலெப்பும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.


Recommended For You

About the Author: Editor