உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வீரருக்கு பதிலாக கோச் பீல்டிங்..!

லண்டன்:உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், வீரருக்கு பதில் அணியின் பயிற்சியாளர் களம் இறங்கி பீல்டிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. சாம்பியனாகும் என்று கருதப்படும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பயிற்சி போட்டியில் தோற்றன.

இங்கிலாந்து அணியில் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவருமே காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடவில்லை. ஜோ ரூட் தாத்தா இறந்துவிட்டதால் அவரும் சென்று விட்டார். அதனால் நேற்றைய போட்டியில் இவர்கள் மூவருமே ஆடவில்லை.

இங்கிலாந்து அணியில் ஏற்கனவே இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் காயத்தில் உள்ளனர். இந் நிலையில், பயிற்சி போட்டியில் பந்துவீச்சாளர்கள் மார்க் உட், ஆர்ச்சர் மற்றும் ஸ்பின் பவுலர் டாவ்சன் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. மார்க் உட் தனது 4வது ஓவரை வீசும்போது காலில் காயம் ஏற்பட்டதால் பாதியில் திரும்பினார்.

அவருக்கு பதிலாக பீல்டிங் செய்ய வந்த ஆர்ச்சரும் காயமடைந்தார். அதனால் பீல்டிங் செய்ய வேற வீரர் இல்லை. அப்போது, இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய துணை பயிற்சியாளருமான காலிங்வுட் பீல்டிங் செய்தார்.

காலிங்வுட், இங்கிலாந்து துணை பயிற்சியாளராக உள்ளார். இயன் மோர்கன், அடில் ரஷீத், மார்க் உட், ஆர்ச்சர் ஆகிய நால்வரும் பீல்டிங் செய்ய முடியாததால் வேற வழியில்லாமல் காலிங்வுட் கொஞ்ச நேரம் களத்தில் பீல்டிங் செய்தார்.


Recommended For You

About the Author: Editor