வடமராட்சியில் கொள்ளை

யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி,  பருத்­தித்­துறை உப­ய­க­திர்­கா­மம் பெருந்­தெரு பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் கொள்­ளைச்­சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதி­காலை வேளை­யில் வீட்­டின் முன்­க­தவை உடைத்­துக்­கொண்டு சென்ற மூன்­று­ பேர் கொண்ட கும்­பல் அங்­கி­ருந்­த­வர்­களை கொட்­டன்­க­ளால் தாக்­கி­விட்டு வீட்­டி­னுள் நீண்­ட­நே­ரம் தேடு­தல் நடத்தி வீட்­டில் இருந்த நான்கு பவுண் தங்க நகை­களை கொள்­ளை­ய­டித்து சென்­றது என்று பொலிஸ் முறைப்­பாட்­டில் பதி­வு­ செய்­யப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த கர்ப்­பி­ணிப் பெண் மந்­திகை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­து­டன் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் சமீ­ப­கா­ல­மாக அதி­க­ரித்­து­வ­ரும் கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளால் அந்­தப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.


Recommended For You

About the Author: ஈழவன்