மாகாண சபை தேர்தல் – உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை!

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாகவும் தேர்தலை நடத்துவதற்கான காலம் தொடர்பாகவும் சட்ட நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

9 மாகாண சபைகளில் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. அத்தோடு ஊவா மாகாண சபையின் அதிகார காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

எனினும் மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் பலமுறை கூடி ஆராயந்துள்ளபோதும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை

இந்த நிலையிலேயே மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor