வைத்தியசாலை மாடியிலிருந்து பாய்ந்து நீதிபதி தற்கொலை!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

நாரஹென்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சிறிசேன கடவத்தைஆராச்சி என்ற ஓய்வு பெற்ற கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீதிபதி சிறுநீரக நோய் உட்பட பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவரது மகன் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் போதே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor