அமெரிக்கச் செல்வந்தர் காலமானார்!

அமெரிக்கச் செல்வந்தர் ரொஸ் பெரோட் (89) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரொஸ் பெரோட் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டுமுறை சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முரண்பாடானவர் என்றும் கொடூரமானவர் என்றும் வர்ணிக்கப்பட்ட அவர், 1962 இல் தனது சொந்த நிறுவனத்தை நிறுவி கணினி தரவுத்துறையில் முன்னோடியாக விளங்கினார்.

1992 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது வெளிநாடுகளில் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டன் வெற்றி பெற்றார். எனினும் ரொஸ் பெரோட் 19% வாக்குகளைப் பெற்றிருந்தார்.


Recommended For You

About the Author: Editor