பொலனறுவையில் ஐஸ் மழை

பொலனறுவை மாவட்டத்தில் தொடா்ச்சியாக 6 மாதங்கள் கடுமையான வறட்சி நிலவிவந்த நிலையில், ஐஸ்கட்டி மழை பெய்திருக்கின்றது.

வெலிகந்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் மன்னம்பிட்டி பகுதியிலும் ஐஸ் மழை பெய்துள்ளது.

பொலன்நறுவையில் கடந்த ஆறு மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.  அந்நிலையில் மழை பெய்தமை அப்பகுதி மக்களிடத்தே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்