போக்குவரத்து நெரிசல்களை குறைக்க கொழும்பில் படகு சேவை

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை படகு சேவையை ஆரம்பிக்க காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகில் முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை நகர்ப்புற மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க  மேற்கொண்டார்.

இந்த படகு சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் குறைவான நேரத்தில்  பயணிக்க முடியுமென்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுவொரு ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்