
காலி- அக்மிமன மணவில பகுதியில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளதாக இராணுவ ஊடக பிாிவு கூறியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறையும் இராணுவமும் தனித்தனியாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்ட சிப்பாய் தற்போது பூசா இராணுவ முகாமில் காவலில் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த பாடசாலைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சித்ததாக தெரிவித்து, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், கடந்த 4 ஆம் திகதி இந்த பாடசாலையில் காவலில் இருந்த சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.