ஹேமசிறி , பூஜிதவை விசாரிக்க நீதியரசர் குழு நியமனம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்குப் பிரதம நீதியரசரால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் பிரதிவாதிகள் கடமைகளை நிறைவேற்றத் தவறியாகத் தெரிவித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், குறித்த நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்