யாழில். ஹெரோயினுடன் இராணுவ வீரர் உட்பட ஐவர் கைது

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று (ஜூலை 8) திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்