ரணில் விக்கிரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தனஇ எரான் விக்கிரமரட்ணஇ அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மிகுந்த பாதுகாப்புடன் வெலிக்கடை சிறையின் பி அறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து சட்டத்தரணி மட்டுமே அவரை சந்திக்க சிறைக்கு விஜயம் செய்த போதிலும் அரசியல்வாதிகள் எவரும் அங்கு செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இந்தக் குழுவினர் சிறைச்சாலைக்கு சென்று ரஞ்ஜன் எம்.பியை நலன் விசாரித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor