யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 17 திகதி அன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.

புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர், முன்னதாக வாழைச்சேனை, வவுணத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.

இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இதற்கு முன்பு கெனிய நாட்டுக்கான இலங்கை தூதுவராக , கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளராக , அமைச்சின் செயலாளராக , உதவி அரச அதிபராக என பல்வேறு பதவிகளை வகித்த அனுபவங்களையும் பெற்றிருக்கிறார்.

சிறந்த நிர்வாகியான இவர் பொருளாதார , புவியியல் துறை நிபுணராகவும் விளங்குகின்றார்.


Recommended For You

About the Author: Editor