விக்கியின் அணியில் முன்னணி, ரெலோ, புளொட், இணையுமாறு சுரேஸ் அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கட்சிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய மாற்றுத் தலைமையை கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் அஞ்சுகின்றார்கள் எனவும் குற்றஞ்சாட்டிள்ள மேற்படி கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொள்கைகளில் தடம் மாறியிருக்கின்ற தமிழரசுக் கட்சியிலிருந்து பங்காளிக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்றும் தன்னிச்சiயாக நின்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதனையும் சாதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய முன்னணி ஒன்று உருவாகிய பின்னர் சில விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் போன்றவை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதைதவிர இந்த புதிய கூட்டணி தொடர்பில் சிலர் அச்சம் கொண்டுள்ளதையும் எங்களால் பார்க்கக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா இதுதொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். குறிப்பாக நாங்கள் மக்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும், இதனால் எந்த பயனும் வரப்பேவதில்லை என்றும் கூறியுள்ளார்.

வாக்குகள் பிரிந்தால் தமக்கு கிடைக்கும் ஆசனங்கள் கிடைக்காமல் போய்விடும் என்ற பிரச்சினையே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை பற்றி சிந்திப்பதை விட ஆசனங்கள் தங்களை விட்டு போய்விடக் கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளார்கள்.

பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குதற்கும், வடக்கு கிழக்கு இணைப்பை கைவிட்டும், சமஸ்டியை கைவிட்டும், அரசாங்கத்தை முழுமையாக பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயறபட்டு வருகின்றது.

இதனாலே மாற்றுத் தலமை என்ற ஒன்று உருவாக்கம் தேவைப்பட்டது. 2017 ஆம் ஆண்டே இந்த மாற்றுத்தலமை பற்றி பேசப்பட்டு வந்தது. அப்போது கூட தாங்கள் விட்ட தவறை திருத்திக் கொண்டு, எல்லேரையும் இணைத்து சரியான பாதையில் போவதற்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு தவறிவிட்டது.

மிக நீண்டகாலமாக பேராடி, பல இலட்சம் மக்கள் உயிர் தியாகம் செய்து. குறைந்தபட்சம் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல், வெறுமனே அரரை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக் கொள்வதைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்தார்கள்.

இதைத்தான் கடந்த நான்கரை வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செய்து வந்தது. இதனால்தான் இன்று மாற்று அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த மாற்று அணி நிச்சையமாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்கும்.

இது குறித்த இந்தியாவுடன், மட்டுமல்லாமல் அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுடனும் பேசி அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துக் கொண்டு செல்வார்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor