கொரோனா – சிகிச்சையளித்த 6 தாதியர்கள் உயிரிழப்பு!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் தற்போதுவரை 1,483 பேரைக் காவுகொண்டுள்ளது. அத்துடன் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸானது சீனாவில் ஆறு தாதியர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன் 1700 இற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களைத் தாக்கியுள்ளதாக பீஜிங் செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ ஊழியர்களில் 1,102 பேர் வுஹானிலும், 400 பேர் ஹூபே மாகாணத்தின் வேறு பிராந்தியங்களிலும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் பிரதியமைச்சர் ஜெங் யிக்சின் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

முகமூடிகள் மற்றும் பாதுகாப்புக் கவசகங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாளும் போது அல்லது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor