பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் புதிய அமைச்சரவை!!

டிசெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற்றை நிறைவேற்றிய பின்னர் நேற்றையதினம் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டார்.

அவரது அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள்

ரிஷி சுனக் – நிதியமைச்சர்

நேற்று வியாழக்கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பின் போது நிதியமைச்சர் பதவியை விட்டு விலகிய சாஜித் ஜாவிட்டுக்குப் பதிலாக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் திறைசேரியின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், பிபிசியின் தேர்தல் விவாதத்தில் பொரிஸ் ஜோன்சனுக்காகக் கலந்து கொண்டபோது, கட்சியில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்தார்.

அரசிய

ஜோர்ஜ் யூஸ்ரிஸ் – சுற்றுச்சூழல் அமைச்சர்

தெரேசா வில்லியர்ஸுக்கு பதிலாக ஜோர்ஜ் யூஸ்ரிஸ் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கமரன் மற்றும் தெரசா மே ஆகியோரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.

பிரெக்ஸிற்றைத் தாமதப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விளக்கினார்.

2010 ஆம் ஆண்டில் இருந்து (Camborne and Redruth) கம்போர்ன் அன்ட் ரெட்ருத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ல் ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததுடன் ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினார்.

ரிஷி சுனக்கின் மனைவி இந்தியக் கோடீஸ்வரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி. இவர்கள் இருவரும் சில வருடங்கள் கலிபோர்னியாவில் வசித்தனர்.

ரிஷி சுனக் – அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரித்தி பட்டேல் – உள்துறை அமைச்சர்

பிரித்தி பட்டேல் பொரிஸ் ஜோன்சனின் முதலாவது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்தும் அவர் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

தீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான திருமதி பட்டேல், பொரிஸ் ஜோன்சனால் மட்டுமே பிரெக்ஸிற்றையும் கட்சியினையும் காப்பாற்ற முடியும் என்று வாதிட்டவர்.

திருமதி தெரசா மே யின் அமைச்சரவையில் சர்வதேச மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். எனினும் இஸ்ரேலிய அரசியல்வாதிகளுடன் அரசாங்கத்தின் அங்கீகாரமற்ற சந்திப்புகள் தொடர்பாக அவர் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

2010 ஆம் ஆண்டில், எசெக்ஸ்,விதம் (Witham) தொகுதியில் அவர் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் கென்சர்வேற்றிவ் கட்சியின் கொள்கை முன்னெடுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியதோடு, புகையிலை மற்றும் மதுபானத் தொழில்களுக்கான பிரசாரங்களையும் மேற்கொண்டார்.

டொமினிக் ராப் – வெளியுறவு அமைச்சர்

டொமினிக் ராப் கடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் முதலாவது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகவும் நாட்டின் முதன்மை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு அதே பதவிகளில் நீடிக்கிறார்.

தீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான ராப் 2015 இல் நீதி அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால் தெரசா மே பிரதமரானபோது அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டேவிட் டேவிஸுக்குப் பின்னர் 2018 இல் அவர் பிரெக்ஸிற் அமைச்சராகப் பணியாற்றினார். எனினும் சில மாதங்களின் பின்னர் திருமதி தெரசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எதிர்த்துப் பதவி விலகினார்.

ஒரு ராஜதந்திரியாக வெளியுறவு அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு, ஒரு சர்வதேச வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

மைக்கேல் கோவ் – டச்சி ஒஃப் லங்காஸ்ரரின் நிர்வாக அமைச்சர்

மைக்கேல் கோவ் மிகவும் அனுபவமுள்ள அமைச்சரவை அமைச்சர். கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சனிடம் தோல்வியடைந்தார்.

மைக்கேல் கோவ் ஜூன் 2017 இல் சுற்றுச்சூழல் அமைச்சரானார். அதேவேளை முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்.

2005 ஆம் ஆண்டு முதல் முதல் சர்ரே ஹீத்தின் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கோவ் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் முக்கிய சகாவாக இருந்தார்.

கல்வி அமைச்சராக இருந்த அவர், பரீடசைகள் மற்றும் பாடத்திட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவரது நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பல போராட்டங்களைச் சந்தித்தார்.

பென் வோலஸ் – பாதுகாப்பு அமைச்சர்

கடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனால் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பென் வோலஸ் தொடர்ந்தும் அதே அமைச்சுப் பொறுப்பிலுள்ளார்.

பென் வோலஸ் 2016 இல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதை ஆதரித்தார். அத்துடன் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு உறவுகளைத் தாக்கும் என்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

சான்ட்ஹேர்ஸ்ரில் பயிற்சிபெற்ற பின்னர், ஸ்கொட்ஸ் காவலர் படைப்பிரிவில் ஒரு தளபதியாகச் சேர்ந்தார்.

ராணுவத்தில் எட்டு ஆண்டுகள் இருந்த அவர் வடக்கு அயர்லாந்து, ஜேர்மனி, சைப்ரஸ் மற்றும் மத்திய அமெரிக்காவில் பணியாற்றினார்.

2005 ஆம் ஆண்டில் லங்காஸ்ரர் அன்ட் வையர் (Lancaster and Wyre) தொகுதியில் வெல்வதற்கு முன்பு அவர் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

லிஸ் ட்ரஸ் (Liz Truss) – சர்வதேச வர்த்தக அமைச்சர்

சர்வதேச வர்த்தக அமைச்சராகவும், பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், பொரிஸ் ஜோன்சன் பதவியேற்றபோது தொடர்ந்தும் அதே பதவியில் இருந்தார்.

தெரேசா மே அமைச்சரவையில் 2016-2017 க்கு இடையில் முதலாவது பெண் பிரபு நிர்வாக அமைச்சராக இருந்தார். டேவிட் கமரனின் அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக 2014-16 காலத்தில் பணியாற்றினார்.

2010 இல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் குழுவின் துணைப் பணிப்பாளராக பணியாற்றினார்.

மாற் ஹன்கொக் – சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சரான மாற் ஹன்கொக் தொடர்ந்தும் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு மாற் ஹன்கொக் கட்சியின் தலைமைப் போட்டியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவளித்தார்.

மேற்கு சஃபேக் தொகுதியில் வெற்றிபெற்ற அவர் 2018 இல் சுகாதார அமைச்சராவதற்கு முன்னர் கலாசார அமைச்சராகப் பணியாற்றினார்.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர். எனினும் தெரசா மே மற்றும் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தங்களை ஆதரித்தார்.

பாங்க் ஒஃப் இங்கிலன்டின் பொருளாதார நிபுணரான அவர் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் உள்ளவர்.

கவின் வில்லியம்சன் – கல்வி அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சராக இருந்த கவின் வில்லியம்சன், தேசிய பாதுகாப்புச் சபையிடமிருந்து தகவல் கசிந்தமை தொடர்பாக தெரசா மே யினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கென்சர்வேற்றிவ் கட்சிக்குள் வில்லியம்சன் செல்வாக்கு மிக்கவர். டேவிட் கமரனின் அமைச்சரவையில் உதவியாளராகவும் கட்சி ஒழுக்கத்திற்கு பொறுப்பான தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பிய அவர் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவளித்தார்.

ஒலிவர் டௌடென் – கலாசார அமைச்சர்

ஹேர்ட்ஸ்மெயரின் (Hertsmere) பாராளுமன்ற உறுப்பினரான ஒலிவர் டௌடென், கென்சர்வேற்றிவ் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார்.

புதிய அமைச்சரவையில் நிக்கி மோர்கனுக்கு பதிலாக கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் இருந்து, அமைச்சரவை அமைச்சராக உள்ள அவர் அரசாங்கக் கொள்கையைச் செயல்படுத்துவதில் பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் முக்கிய நபராக உள்ளார்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியான அவர், டேவிட் கமரனின் ஆலோசகராகப் பணியாற்றினார். தொடர்ந்து பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் துணைத் தலைவரானார்.

ஆலோக் ஷர்மா – வர்த்தக அமைச்சர்

ஆன்ட்ரியா லீட்சம் வகித்த வர்த்தக அமைச்சுப் பொறுப்புக்கு ஆலோக் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெடிங் (Reading) மேற்கு பாராளுமன்ற உறுப்பினரான ஆலோக் ஷர்மா, பொரிஸ் ஜோன்சனுக்கு அதரவளித்துடன் 2019 ஜூலை மாதம் அமைச்சரவையில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இணைந்துகொண்டார்.

நொவெம்பர் மாதம் கிளாஸ்கோ நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டிற்குப் பொறுப்பான அமைச்சராக ஷர்மா இருப்பார்.

2010 இல் பாராளுமன்ற உறுப்பினரானத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஒரு பட்டய கணக்காளராக வங்கியில் பணியாற்றினார்.

இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரொபேர்ட் ஜென்ரிக் – வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

முன்னாள் திறைசேரி அமைச்சரான ரொபேர்ட் ஜென்ரிக், கடந்த ஜூலையில் வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரானார். தொடர்ந்தும் அதே பொறுப்புக்களை வகிக்கின்றார்.

பொரிஸ் ஜோன்சனால் மட்டுமே கென்சர்வேற்றிவ் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்.

நியூவேர்க் (Newark) தொகுதியில் ஜூன் 2014 இல் நடந்த இடைத்தேர்தலில் ஜென்ரிக் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2015 பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அதிக பெரும்பான்மையுடன் வென்றார்.

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பின்போது ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கு ஆதரவளித்தார்.

தெரேஸ் கொஃபி (Therese Coffey) – வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர்

பிரெக்ஸிற் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக அம்பர் ரூட் பதவி விலகியதையடுத்து அவரது இடத்துக்கு முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரேஸ் கொஃபி நியமிக்கப்பட்டார்.

தெரேஸ் கொஃபி அதற்கு முன்னர் பாராளுமன்றத் துணைத் தலைவர் மற்றும் உதவி கொறடா போன்ற பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

பிரெக்ஸிற் வாக்கெடுப்பின்போது நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் தெரசா மேவின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்.

எவ்வாறாயினும், மக்களின் முடிவை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசியதோடு பொரிஸ் ஜோன்சனின் தலைமையை ஆதரித்தார்.

ரொபேர்ட் பக்லன்ட் – நீதி அமைச்சர்

முன்னாள் வழக்கறிஞர் நாயகமான ரொபேர்ட் பக்லன்ட் கடந்த ஜூலையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் சிறைச்சாலைகள் அமைச்சராக இருந்தார்.

பொரிஸ் ஜோன்சன் கென்சர்வேற்றிவ் கட்சிக்குத் தலைவராக வேண்டும் எனப் பகிரங்கமாக ஆதரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கவேண்டும் என்று பிரசாரம் செய்த அவர் வாக்கெடுப்பின் முடிவை ஏற்றுக்கொள்வது முக்கியம் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை எதிர்த்ததுடன் பிரெக்ஸிற் சமரசத்தின் தேவை குறித்துக் கூறியிருந்தார்.

2010 இல் இரண்டாவது தடவையாக தெற்கு ஸ்வின்டனுக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குற்றவியல் சட்டம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்-மேரி ட்ரெவெலியன் – சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்

பேர்ரிக்-அப்பொன் (Berwick-upon) பாராளுமன்ற உறுப்பினரான அன்-மேரி ட்ரெவெலியன், ஆலோக் ஷர்மாவுக்கு பதிலாக சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கென்சர்வேற்றிவ்களின் 2019 தேர்தல் வெற்றியின் பின்னர் அன்-மேரி ட்ரெவெலியன் ஆயுதப்படைகளின் அமைச்சரானார்.

தீவிர பிரெக்ஸிற் ஆதரவாளரான அவர், முன்னாள் பிரதமர் தெரேசா மே யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018 நொவெம்பரில் தனது ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

பட்டய கணக்காளரான அன்-மேரி ட்ரெவெலியன் பொதுக் கணக்குக் குழுவில் பணியாற்றியுள்ளதுடன் அரசாங்க செலவினங்களை ஆராய்வதற்குப் பொறுப்பாகவும் இருந்துள்ளார்.

கிரான்ற் ஷப்ஸ் – போக்குவரத்து அமைச்சர்

சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த கிரான்ற் ஷப்ஸ், 2019 ஜூலை மாதம் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதை ஆதரித்தார். பின்னர் பிரெக்ஸிற்றை ஆதரிப்பதாகக் கூறினார்.

வற்ஃபேர்ட்டில் பிறந்த கிரான்ற் ஷப்ஸ், மன்செஸ்ரர் பொலிரெக்னிக் வளாகத்தில் வணிக மற்றும் நிதியியல் படித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஷப்ஸ் 2005 இல் ஹார்ட்ஃபேர்ட்ஷையரின் வெல்வின் ஹற்ஃபீல்டின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

ஜோர்ஜ் யூஸ்ரிஸ் – சுற்றுச்சூழல் அமைச்சர்

தெரேசா வில்லியர்ஸுக்கு பதிலாக ஜோர்ஜ் யூஸ்ரிஸ் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கமரன் மற்றும் தெரசா மே ஆகியோரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.

பிரெக்ஸிற்றைத் தாமதப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.

2010 ஆம் ஆண்டில் இருந்து (Camborne and Redruth) கம்போர்ன் அன்ட் ரெட்ருத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

பிரான்டன் லூவிஸ் – வட அயர்லாந்து மாநில அமைச்சர்

அமைச்சரவை மறுசீரமைப்பில் வட அயர்லாந்து மாநில அமைச்சராக பிரான்டன் லூவிஸ் (Brandon Lewis) நியமிக்கப்பட்டுள்ளார்.

வட அயர்லாந்து மாநில அமைச்சராக இருந்த ஜூலியன் ஸ்மித்துக்குப் பதிலாக வீடமைப்பு மற்றும் குடிவரவு துணை அமைச்சராக இருந்த பிரான்டன் லூவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஜூலை மாதம் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் குடிவரவு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வழக்கறிஞரும் பிரென்ட்வூட் போரோ கவுன்சிலின் தலைவருமான பிரான்டன் லூவிஸ் , 2010 முதல் கிரேட் யாமத்தின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அலிஸ்ரர் ஜாக் – ஸ்கொட்லாந்து அமைச்சர்

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அலிஸ்ரர் ஜாக் ஸ்கொட்லாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் அலிஸ்ரர் ஜாக் 2017 ஆம் ஆண்டில் டம்ஃபிரீஸ் அன்ட் கலோவேயின் (Dumfries and Galloway) பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெப்ரவரி 2019 இல் உதவி அரசாங்க கொறடாவாக நியமிக்கப்பட்டிருந்தார்.

சைமன் ஹார்ட் – வேல்ஸ் மாநில அமைச்சர்

கடந்த நொவெம்பரில் அலுன் கான்ஸ் (Alun Cairns) பதவி விலகியதைத் தொடர்ந்து வேல்ஸ் மாநில அமைச்சராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டார்.

2010 முதல் (Carmarthen West and South Pembrokeshire) கமாதென் வெஸ்ற் அன்ட் சவுத் பெம்புரோக்ஷையர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான சைமன் ஹார்ட்டுக்கு வேல்ஸ் மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் அவர் அமைச்சரவை அலுவலகத்தில் துணை அமைச்சராகப் பணியாற்றினார்.


Recommended For You

About the Author: Editor