பாடசாலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் CCDயிடம்

பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று பதுரலிய, திக்ஹேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்ட சம்பவத்தில் 32 வயதுடைய ஹப்புஆரச்சிகே பவித்ர மதுசங்க என்பவர் கைது செய்யப்பட்டார்.

பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் பதுரலிய பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு குற்றப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor