முடிவுக்கு வந்த அவுஸ்ரேலிய காட்டுத் தீ

அவுஸ்ரேலியாவில் பல சேதங்களை ஏற்படுத்திய காட்டுத் தீ, நீண்ட போராட்டத்திற்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பரவி வந்த காட்டுத் தீ, முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக தீயணைப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வியாழக்கிழமை மதிய நேர நிலவரப்படி, நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பரவி வந்த காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பரவி வந்த காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பை நாசப்படுத்திய இந்தக் காட்டுத் தீயில் சுமார் 100 கோடி விலங்கினங்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்