ஹற்றன் சிங்கமலை காட்டுத் தீ

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ, விமானப்படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

குறித்த தீ இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட நிலையில் இதன்காரணமாக காட்டுப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் காடு முற்றாக எரிந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுப் பகுதியில் தீ இன்று மாலை வரை தொடர்ந்து பரவிய நிலையில் தீயைக் கட்டுப்படுத்த விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்திருந்தது.

இதேவேளை, காட்டுப்பகுதியில் விசமிகள் சிலரே இவ்வாறு தீ வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்