சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களுக்கு முக்கிய தகவல்!

இலங்கையில், வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

வேரஹரவுக்கு சென்று யாரும் தமது நேரங்களை வீணடிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள ஏற்கனவே இருந்த டோக்கன் முறை மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor