போயிங் 737 ரக விமான ஒப்பந்தத்தை இரத்து செய்தது சவுதி

போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை சவுதி அரேபியா இரத்து செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் விலைகுறைந்த விமான சேவை நிறுவனமான ஃப்ளையடீல், இவ்வாறு 30 போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 737 ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்களில் சிக்கியமை காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த ஒக்டோபர் மாதமும், எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதமும் விபத்துக்கள் ஏற்பட்டன. எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விபத்தில் 346 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்துக்களைத் தொடர்ந்து 737 ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறுகளை சரி செய்து வருவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு 737 ரக விமானங்களை வாங்கப்போவதில்லை என ஃப்ளையடீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

737 ரக விமானங்களுக்கு பதிலாக சவுதி அரேபிய அரசாங்கத்தின் விமான சேவையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஏர்பஸ் யு320 ஃப்ளீட் ரக விமானங்களை ஃப்ளையடீல் பயன்படுத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor