மட்டக்களப்பில் பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு

மட்டக்களப்பு – செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் கோயிலின் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.

செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இந்த வழிப்பிள்ளையார் கோயில் அமைக்கப்படிருந்தது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

நேற்றிறவு 8 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் தாம் இறுதியாக நின்றதாகவும் நள்ளிரவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்த காலத்தின் முன்பிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததைத் துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இப்பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விசமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப்பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமாக வேலையைச் செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக் குழுவினர் கவலை வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 


Recommended For You

About the Author: ஈழவன்