பொதிகளை ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசிபொதிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் குறித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறியின் இருந்த 7000 கிலோ அரிசி பொதிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்