100 மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா ?

அரச பாடசாலையில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல ‘சூரரை போற்று’ படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவரும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி,  தெலுங்கு நடிகர் மோகன் பாபு,  கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்ரர்ரெயின்மென்ற் நிறுவனமும்,  சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல ‘சூரரை போற்று’ படக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்